fbpx

அதிமுக பொதுக்குழு..! ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..! ஓபிஎஸ் அறிவிப்பு

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயசந்திரன், அதிமுக பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு..! ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..! ஓபிஎஸ் அறிவிப்பு

அப்போது, நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் தனிநீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லாது என்றும் தீர்ப்பு வழங்கினர். இதனால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர்.

அதிமுக பொதுக்குழு..! ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு..! ஓபிஎஸ் அறிவிப்பு

இந்நிலையில், பெரியகுளத்தில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ”சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்” என தெரிவித்தார். இருவரும் மாறி மாறி மேல்முறையீடு செய்வதால் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று குழப்பத்தில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

தேர்தல் முறைகேடு : ஆங் சான் சூச்சிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை.. மியான்மர் நீதிமன்றம் அதிரடி

Fri Sep 2 , 2022
மியான்மர் நாட்டின் முன்னாள் அரசியல் தலைவர் ஆங்சான் சூச்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மியான்மரின் தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்பட்டது.இதை அடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவத்தினர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றினர். இதையடுத்து ஆங்சான் சூச்சி வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார். 76 வயதாகும் சூச்சி தன்மீதான புகார்களுக்கு அவர் […]

You May Like