fbpx

மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்..? – ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி..!

”தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியுமே எதிர்கால நடவடிக்கைகள் அமையும்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில், தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்களுக்கு அதிமுக தொண்டர்களின் வணக்கம். தொண்டர்களின் இயக்கமாக, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கினார்கள்.

தற்போது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழலில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது. சர்வாதிகாரமும் நடக்காது. இது அதிமுகவுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி. அனைவரும் ஒன்றுபட வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்திருக்கிறோம். நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்போம். அனைவரையும் அரவணைத்துச் செல்வதே தலைமையின் பண்பு.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன். அதிமுக ஒரே இயக்கம் தான். தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் ஆலோசித்து பொதுக்குழுவைக் கூட்டுவோம். தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியுமே எதிர்கால நடவடிக்கைகள் அமையும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

யாருக்கெல்லாம் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்..? தமிழக அரசு புதிய அறிவிப்பு..!

Wed Aug 17 , 2022
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சுதந்திர தின விழாவில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், “மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கிடையே, இந்த அகவிலைப்படி உயர்வு அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில், […]

You May Like