fbpx

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும்.. புதிய கோரிக்கை

அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்..

அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.. அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்றும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் தரப்பு நீதிபதிகள் அறிவுறித்தினர்… மேலும் பொதுக்குழு தொடர்பான வழக்குகளை 2 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. அதன் அடிப்படையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நாளை முதல் விசாரிக்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்திருந்தார்..

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கை கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது என்று பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து கோரிக்கை வைத்துள்ளார்.. இதுகுறித்து அவர் தலைமை நீதிபதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் : நீதிமன்றத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக நீதிபதி கூறியிருந்தது வழக்கிற்கு சம்மந்தமில்லாதது . எனவே இந்த வழக்கை கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தால் முறையாக இருக்காது.. வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம்.. எப்படி திரும்ப ஒப்படைப்பது..?

Wed Aug 3 , 2022
நிரந்தர கணக்கு எண் அல்லது பான் (PAN) என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பத்து இலக்க தனித்துவமான எண்ணெழுத்து எண் மற்றும் இது ஒரு மிக முக்கியமான நிதி ஆவணமாகும். வருமான வரித்துறையால் வழங்கப்படும் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அட்டை பான் கார்டு என்று பிரபலமாக அறியப்படுகிறது. ஆனால் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால் அவர்கள் மிகப்பெரிய அபராதத்தை செலுத்த வேண்டும். வருமான வரிச் சட்டம், 1961 இன் […]

You May Like