fbpx

அதிமுக பிரமுகரை; கூலிப்படை வைத்து கொலை செய்த பெண்… காரணம் இதுதான்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமி நகரில் வசிப்பவர் செந்தில் குமார் (42), இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு அண்ணாதுரை விட முன்னேற்ற கழக ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். இந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி பைக்கில் அவரது மகனை வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு பைக்கில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செந்தில்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு பொத்தேரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் செந்தில்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சென்னை ஜெ.ஜெ. நகர் பகுதியில் வசிக்கும் செந்தில்குமாரின் உறவினர் விஜயலட்சுமி (40), என்ற பெண்ணை கைது செய்தனர். அந்த பெண் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கூலிப்படையை வைத்து செந்தில்குமாரை கொலை செய்ததாக விஜயலட்சுமி ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட விஜயலட்சுமியை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனைப் படைக்கும் ’பொன்னியின் செல்வன்’..!! எதிர்பார்ப்பு மேலும் அதிகரிப்பு..!!

Wed Sep 28 , 2022
செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு, தொடங்கிய சில மணி நேரத்திலேயே அனைத்தும் விற்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் திரையுலகின் நீண்டநாள் கனவான பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் முயற்சியால் நனவாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட நடிகர் […]
டிக்கெட் முன்பதிவில் புதிய சாதனைப் படைக்கும் ’பொன்னியின் செல்வன்’..!! எதிர்பார்ப்பு மேலும் அதிகரிப்பு..!!

You May Like