fbpx

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் மாவட்ட அதிமுகவினர்..! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!

எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓபிஎஸை அதிமுகவிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள சூழலில் அதிமுக பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் மாவட்ட அதிமுகவினர்..! ஷாக்கில் எடப்பாடி பழனிசாமி..!

இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, சேலம் ரவி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிமுக அரசியல் வட்டராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் தனியாரிடம் ஒப்படைக்க முடிவா..? அமைச்சர் சக்கரபாணி பரபரப்பு பதில்..!

Thu Aug 4 , 2022
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “நெல்லின் ஆதார விலையை மத்திய அரசு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தி உள்ளது. இது அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இம்முறை நெல் கொள்முதல் நிலையங்கள் […]
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலை ரூ.3500..! வெளியான முக்கிய அறிக்கை..!

You May Like