fbpx

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்பதை மாற்ற முடியாது..!! ரவீந்திரநாத்..

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23-ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும், மேலும் தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், இந்த தீர்ப்பால் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என உறுதியானது என்று கூறியுள்ளார்.

Rupa

Next Post

மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம்..? - ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி..!

Wed Aug 17 , 2022
”தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியுமே எதிர்கால நடவடிக்கைகள் அமையும்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில், தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்களுக்கு அதிமுக தொண்டர்களின் வணக்கம். தொண்டர்களின் இயக்கமாக, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கினார்கள். தற்போது […]
புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் ஓபிஎஸ்..? அடிமேல் அடி விழுந்ததால் பயங்கர அப்செட்..!!

You May Like