மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உருவாகுமா..? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ”மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம் என்றும் தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்றபடி எந்தக் கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும் என்று கூறினார்.
தேர்தல் அறிக்கையில் திமுக கூறிய வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை என்றும் மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். முட்டுகாட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன. விரைவில் பாஜகவில் ஒன்றிய அளவில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : சென்னை துறைமுகத்தில் வேலை..!! BE தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?