fbpx

AMMK: அதிமுகவுக்கு எதிராக அமமுக!… தேனி மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டி!… வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

AMMK: பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ல அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தேனி மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்தவகையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அமமுகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேனி மக்களவை தொகுதியில் டிடிவி தினகரன், திருச்சி தொகுதியில் செந்தில் நாதன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இதற்கான அறிவிப்பை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றிபெற்றிருந்தார். எனவே, இந்த முறை அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேனி தொகுதியில் ஓபிஆரின் வெற்றிக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் சின்னம் எதுவும் உறுதி செய்யப்படாத காரணத்தால் தேர்தலில் ஓபிஆர் போட்டியிடவில்லை. அதே நேரத்தில் தனது செல்வாக்கை நிருபிக்கும் வகையில் தானே போட்டியிடவுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அந்த வகையில்ர ராமநாதபுரத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். எனவே தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் களம் இறங்குவார்கள் என கூறப்படுகிறது.

Readmore: அவசர அவசரமாக!… 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்!… CBSE அதிரடி அறிவிப்பு!

Kokila

Next Post

Vote: வாக்காளர் அட்டை இல்லையா?... இந்த 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!... தேர்தல் ஆணையம்!

Sun Mar 24 , 2024
Vote: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டில் 17வது மக்களவையின் காலமானது, வரும் ஜூன் 16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் 18-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையில், தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்திய நாடு முழுவதும் நடைபெறவுள்ள தேர்தலானது, ஏப்ரல் 19 தேதி தொடங்கி, ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. […]

You May Like