fbpx

TN Assembly 2024 : இன்றும் கருப்பு சட்டை!! சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த அதிமுக!

கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதனை சபாநாயகர் நிராகரித்ததால்,  அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.  

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்தனர்.  இதையடுத்து தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் தொடங்கியது.  சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இன்று சட்டமன்றம் கூடியதும் கேள்வி நேரத்திற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கல் குறித்து உடனடி விவாதம் நடத்தக்கோரி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகள் எந்தி முழக்கமிட்டனர். இதனால் சட்டப் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு,  நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல. வினா விடை முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன்.  முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா என எடப்பாடி பழனிசாமியை பார்த்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர் பின்னர் அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். ன்னர், முதலமைச்சர் வேண்டுகோளின் பேரில் அதிமுகவினரை சபாநாயகர் அவைக்குள் அனுமதித்த பிறகும், விவாதத்தில் பங்கேற்காமல் புறப்பட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; கள்ளச்சாராய மரணங்கள்..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் கட்சி செய்யப்போகும் உதவி..!! என்ன தெரியுமா..?

English Summary

When the AIADMK members demanded that question time be postponed, the speaker rejected it, and the AIADMK members walked out

Next Post

முதல்வராக இருந்த உங்களுக்கு தெரியாதா..? எடப்பாடியிடம் வந்து விழுந்த கேள்வி..!! சட்டப்பேரவையில் பரபரப்பு..!!

Sat Jun 22 , 2024
When the AIADMK members demanded that question time be postponed, the Speaker rejected it, so the AIADMK members walked out today.

You May Like