fbpx

அதிமுகவின் பிரம்மாண்ட மாநாட்டுக்கு தடையில்லை..!! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!! கொண்டாட்டத்தில் தொண்டர்கள்..!!

காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறத்தில் ஆக.20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. விமானங்கள் தரையிரங்கும் போது மிகவும் தாழ்வான பகுதியில் தான் பறக்கும். விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.

சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அதிமுகவினர் கூறியுள்ளனர். இதனால், அன்றைய தினம் விமானங்கள் தரையிரங்குவதில் இடையூறு ஏற்படக்கூடும். மாநாட்டில் பட்டாசுகள் வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமான போக்குவரத்துத் துறையால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். ஆகையால், அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாநாடு நிகழ்ச்சி முழுவதும் எவ்வித வெடிபொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி வழங்கி உள்ளோம் என அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

4 மாதத்திற்கு முன்பே மாநாடு நடைபெறுவது குறித்து அறிவிப்பு செய்து விட்டனர். கடைசி நேரத்தில் தடை கேட்டால் எவ்வாறு முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநாட்டுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Chella

Next Post

36 முறை உருமாற்றம்..!! அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா..!! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

Fri Aug 18 , 2023
கொரோனா வைரஸ் பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்தாலும், அதன் புதிய மாறுபாடுகள் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், உருமாறிய கொரோனா வைரஸை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்காவின் உயர்மட்ட நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாறுபாட்டுக்கு BA.2.86 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள பதிவில், “CDC கோவிட்-19 நோயை உண்டாக்கும் வைரஸின் புதிய பரம்பரையை கண்காணித்து வருகிறது. இதற்கு BA.2.86 […]

You May Like