fbpx

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்!. ஹமாஸ் தலைவரின் சகோதரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்!

Israeli airstrike: காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் சகோதரி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீன பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் மஹ்மூத் பாஸல் கூறியதாவது, நேற்று செவ்வாய் கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் சகோதரி உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியானதாகவும் அவர்களின் உடல்கல் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருப்பதாகவும், போதுமான கருவிகள் இல்லாததால் மீட்பு பணிகள் தாமதமானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அல் – அஹ்லி மருத்துவமனைக்கு அவர்களில் சில உடல்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அக்டோபர் 7 ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஹமாஸ் வீரர்கள் அங்கு பதுங்கியிருந்ததாக இஸ்ரேல் குறிப்பிடுகிறது. ஹனியேவின் குடும்பத்தினர் உள்ள வீடு என்று இஸ்ரேல் குறிப்பிடவில்லை.

ஹனியேவின் குடும்பத்தினர் பலியானதை உறுதிசெய்த ஹமாஸ் அமைப்பு, காஸாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அழித்தல் தொடர்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகமே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளது. அதாவது இஸ்ரேலுக்கு ராஜ்ய மற்றும் ராணுவ ஆதரவு அளிக்கும் அமெரிக்கா, காஸாவை அழித்தொழிக்க அனுமதிப்பதாகவும் ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போரில் இதுவரை 37,600 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டாலும், போர் ஓயாது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: சபாநாயகர் தேர்தல்!. இன்று லோக்சபாவில் இருப்பதற்காக எம்.பி.,க்களுக்கு பாஜ., காங்., 3 லைன் ‘விப்’ வழங்கப்பட்டுள்ளன!

Kokila

Next Post

அதிக வட்டி ஈட்டக்கூடிய சேமிப்பு திட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? முழு விவரம் இதோ!

Wed Jun 26 , 2024
What savings schemes are available in banks or post offices with high interest rates? Here let's know more about Postal Savings Schemes with higher interest and lower tax liability.

You May Like