fbpx

7th பாஸ்.. SSLC ஃபெய்ல்.. இரண்டில் எது சிறந்தது?  AI சொன்ன பதில்.. குழம்பிய பயனர்..!!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தடம் பதிவிட்டது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்துவிட்டது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அளவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன.

ஏ.ஐ தொழில்நுட்பம் வந்த பிறகு, பலரும் அந்த தொழில்நுட்பத்திடம் பல கேள்விகளை கேட்டு, அது சரியாக பதில் சொல்கிறதா என்பதை பார்க்கிறோம். சிலர் தங்களின் வேலையை செய்வதற்கும், இன்னும் சிலர் தங்களின் வாழ்க்கைக்கான ஆலோசனைகளையும் ஏ.ஐ.தொழில்நுட்பத்திடம் கேட்டு வருகின்றனர். ஒரு பயனாளி, கவுன்டமணி – செந்தில் நகைச்சுவையில் வருவதைப்போல 7ஆம் வகுப்பு பாஸ் பெரியதா அல்லது SSLC ஃபெயில் பெரியதா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நகைச்சுவையில் ஏ.ஐ அளித்த பதில் தான் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

SSLC ஃபெயில் பெரியதா? அல்லது 7ஆவது பாஸ் பெரியதா என்ற கேள்விக்கு, “இரண்டு படிப்பும் முடிவுபெறாமலோ அல்லது பாதியில் தடைபட்டோ தான் உள்ளது. ஆனால் 7ஆவது பாஸ் தான் பெரியது. ஏனென்றால், SSLC ஃபெயில் என்றால் 10ஆம் வகுப்பு முடிக்காமல் இருப்பது. 7ஆவது பாஸ் என்பதை விடவும், 10ஆம் வகுப்பு ஃபெயில் என்பது குறைவான தகுதி தான். எனவே 7ஆவது பாஸ் என்பது தான் பெரிய தகுதி என பதிலளித்துள்ளது. இது போன்ற ஒரு எளிய மற்றும் குழப்பமான கேள்விகளுக்கு ஏ.ஐ.தொழில்நுட்பமே தடுமாறுகிறது என பலரும் சமூகவலைதளங்களில் கிண்டலடிடுத்து வருகிறார்கள்.

Read more ; ரஜினியின் படத்தை முந்தியதா கோட் திரைப்படம்..? இதுவரை எத்தனை கோடி வசூல்..?

English Summary

AI’s answer to the question whether 7th pass is bigger or SSLC fail is trending now.

Next Post

நடிகர் சித்தார்த்துக்கு டும் டும் டும்..!! மணப்பெண் யார் தெரியுமா..?

Mon Sep 16 , 2024
Actor Siddharth and actress Aditi Rao Hydari have officially announced their marriage.

You May Like