ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கடந்த மாதம், தன்னுடைய நகை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த, சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரஜினிகாந்தின் வீட்டில் வேலை செய்த, ஈஸ்வரி என்பவர் வசமாக சிக்கினார். அதே போல் அவருக்கு உதவியாக இருந்தது ட்ரைவர் வெங்கடேஷ் என்பதும் தெரியவந்தது. ஐஸ்வர்யாவின் நகையை விற்று கிடைத்த பணத்தில், மகளுக்கு திருமணம், ரூ. கோடியில் வீடு என ஜெகஜோதியாக வாழ்ந்தது மட்டும் இன்றி, கணவருக்கு காய்கறி கடையும் வைத்து கொடுத்துள்ளார். அதே போல், வெங்கடேஷனும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்து என்ஜாய் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னிடம் இருந்த 60 பவுன் நகை மட்டுமே காணாமல் போனதாக கூறிய நிலையில், ஈஸ்வரி மற்றும் வெங்கடேஷ் இருவரும் தந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஐஸ்வர்யாவின் வீட்டிலிருந்து, இவர்கள் இருவரும் சுமார் 110 சவரன் திருடியுள்ளதாக தெரிகிறது. இது தான், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 50 பவுன் குறித்து சொல்லாமல் மறைத்ததற்கு காரணம் என்ன என விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், பல நகைகள் அதில் இருந்ததால், சரியாக நியாபகம் இல்லை. என்னுடைய நண்பர்கள் கொடுத்த நகையும் அதில் தான் இருந்தது என ஐஸ்வர்யா சமாளித்துள்ளார். பொதுவாக 5 பவுன் நகை தொலைந்தாலே 7 பவுன் தொலைந்து விட்டது என கூறுபவர்கள் மத்தியில் ஒன்றல்ல… இரண்டல்ல 50 பவுன் குறைத்து கூறி… ரஜினியும் இந்த சிக்கலில் சிக்க வைத்துள்ளாராம் ஐஸ்வர்யா என சில தகவல்கள் அரசல் புரசலாக கூறப்படுகிறது.
ரஜினி நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் அதிகபட்சமாக 80 கோடிக்கு மேல் தான் சம்பளமாக பெறுகிறார். இப்படி சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த தொழில் மூலம் கிடைக்கும் லாபம் போன்றவற்றிற்கு அவர் எப்படி வருமான வரி செலுத்தி வருகிறார் என்பது தெரியவில்லை. ஏற்கனவே இந்த நகைகள் குறித்து வெளியான தகவலில் இது ஐஸ்வர்யாவுக்கு அவரின் தந்தை திருமணத்திற்கு போட்ட நகைகள் என கூறப்பட்ட நிலையில், எப்படி அவர் இந்த நகை பற்றிய தகவலை நினைவில் வைக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. விசாரணையில் கூட, இந்த நகைகளுக்கு ரசீது உள்ளதா? யார் பணத்தில் வாங்கப்பட்டது என்பது போன்ற கேள்விகளும் சுற்றி வருகிறது. 50 பவுனை குறைவாக கூறியதன் பின்னணி என்ன? என்று கேள்வி ஒருபுறம் எழ மக்களால் மண்டை காய்ந்து கடுப்பில் உள்ளாராம் ரஜினிகாந்த்.