fbpx

இளம் நடிகரை 2-வது திருமணம் செய்யும் ஐஸ்வர்யா..?அதிர்ச்சியில் முன்னாள் கணவர் தனுஷ்..!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தை ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தில் தற்போது பிஸியாக உள்ளார். இந்த சூழலில் நடிகர் தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2-வது திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. மேலும், ஒரு இளம் ஹீரோவுடன் சென்னை ரிசார்ட்டில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காணப்பட்டதாக கூட தகவல் வெளியானது. அந்த இளம் நடிகரையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2-வது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. ஐஸ்வர்யாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், ஐஸ்வர்யா 2-வது திருமணம் குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. அவற்றில் எந்த உண்மையும் இல்லை. அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் இருவரும் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு அவர்களின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், அவர்கள் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்யவில்லை. ஐஸ்வர்யா தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். இதற்கிடையே, ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் இந்தாண்டு திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்ட திமுக பெண் கவுன்சிலர்..!! இதுதான் காரணமா..? நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

Wed Jul 12 , 2023
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால் (53). இவர், நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி தேவிப்பிரியா ராசிபுரம் நகர் மன்றத்தின் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களது மூத்த மகள் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மோனிஷா ராசிபுரம் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று […]
குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்ட திமுக பெண் கவுன்சிலர்..!! இதுதான் காரணமா..? நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

You May Like