fbpx

கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்காத அஜித்…! நடிகர்கள் வருகையால் அதிர்ந்த மேடை…!

சென்னை கிண்டியில் தமிழ் திரையுலகினர் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் அஜித் பங்கேற்கவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டு, டிசம்பர் மாதம் 24ஆம் தேதி விழாநடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பின்னர் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழைகாரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று கலைஞர் நூற்றாண்டு விழா சென்னை கிண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், திரைத்துறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல், மம்மூட்டி, சிவ ராஜ்குமார், பார்த்திபன், சூர்யா, கார்த்திக், பிரசாந்த், யோகிபாபு, விஜய் ஆன்டனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும் நடிகைகள், ரோஜா, கௌதமி, நயன்தாரா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயக்குனர்கள் ஷங்கர், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், நெல்சன் மாறி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில் பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இந்த நிகழ்ச்சியில் அஜித் பங்கேற்கவில்லை, நடிகர்கள் பலர் வெளிநாடு படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள நிலையில், நடிகர் அஜித் வராதது பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே நடிகர் அஜித் விஜயகாந்தின் மறைவிற்கு பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

ரூ.1000 பிளஸ் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரவில்லையா...? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க...!

Sun Jan 7 , 2024
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் புகார்கள் இருப்பின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பரிசு தொகுப்பு ஒன்றிய, மாநில […]
பொங்கல் பரிசு ரூ.1,000..!! இதை செய்தால்தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்..!! எளிய டிப்ஸ் இதோ..!!

You May Like