நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. நீண்ட காலமாக இப்படத்தை எடுத்து வருகின்றனர். இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மேலும், படப்பிடிப்பில் தாமதம் ஆகி வருவதால், ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர்.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.