விடாமுயற்சி படத்திற்கு ரூ.105 கோடி அஜித் சம்பளமாக வாங்கிய நிலையில், இப்படத்திற்கு தனது ஊதியத்தை ரூ.5 கோடி உயர்த்தியுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில், திரைப்படம் ஏப்ரல் 10 திரையரங்குகளில் வெளியானது. மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் உலகளவில் 4 நாட்களில் ரூ.155 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் நடித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படத்திற்கு ரூ.105 கோடி அஜித் சம்பளமாக வாங்கிய நிலையில், இப்படத்திற்கு தனது ஊதியத்தை ரூ.5 கோடி உயர்த்தியுள்ளார். இதனால் குட் பேட் அக்லி படத்திற்கு அஜித் ரூ.110 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், நடிகை த்ரிஷாவுக்கு ரூ.4 கோடியும், வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸுக்கு ரூ.50 லட்சமும், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த சுனிலுக்கு ரூ.50 லட்சமும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரூ.3 கோடி ஊதியம் கொடுக்கக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு ரூ.4 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ.190 கோடி முதல் ரூ 200 கோடி வரை தான் இருக்கும் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More : அடேங்கப்பா..!! மதுரை – சென்னைக்கு ரூ.6,000 டிக்கெட்டா..? திணறும் பயணிகள்..!! ஆம்னி பேருந்துகளில் அடாவடி..!!