fbpx

கஷ்டப்படும் ரசிகருக்கு 15 லட்சம் செலவில் வீடு கட்டி தரும் அஜித்குமார்!!! ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு..!

நடிகர் அஜித்குமார், கஷ்டப்படும் ரசிகருக்கு 15 லட்சம் செலவில் வீடு கட்டி தருகிறார், ஆனால் பத்திரபதிவுக்கு 1 லட்சம் செலுத்தவேண்டும் என்று கூறி மோசடி செய்துள்ளனர் என பாதிக்கப்பட்டவரின் மனைவி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் ராஜேஸ்வரி தம்பதியினர். ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது இதனை பயன்படுத்திக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம் தாளையத்துப்பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் தான் அஜித் ரசிகர் மன்ற தலைவர் அவர்களின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறி நம்ப வைத்துள்ளார். நடிகர் அஜித் அவர்கள் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது கணவரை ஏமாற்றி விட்டதாக ராஜேஸ்வரி தனது புகார் மனுவில் குறிப்பிட்டார்.

வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அதன் பின்பு வீடு கட்டுவதற்கான தொகை 15 லட்சமும், பத்திரப்பதிவிற்கான 1 லட்சமும் சேர்த்து உங்களின் வங்கி கனகுக்கு வந்துவிடும் என்று கூறி சிவா என்பவர் ஏமாற்றி உள்ளதாக ராஜேஸ்வரி தனது புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் அவரை உறுதிபட நம்ப வைப்பதற்கும் அவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கும் நடிகர் அஜித்குமார் அவர்களின் மேலாளர் சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை போலியாக தயார் செய்து என் கணவர் ஐயப்பனிடம் பேசி அவர் பணி புரியும் இடத்திற்கு சென்று இருவது ரூபாய் போலி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலமாக சிறிய சிறிய தொகையாக ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை சிவாவிடம் கொடுத்து ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியினர் ஏமாந்துள்ளதாகவும் தனது புகார் மனுவில் ராஜேஸ்வரி குறிப்பிட்டிருக்கிறார் தாங்கள் ஏமாந்ததை அறிந்து சிவாவிடம் கேட்டதற்கு இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுவதாகவும் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன் தாங்கள் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடிகர் அஜித்தின் ரசிகர் ஐயப்பன் மனைவி ராஜேஸ்வரி புகார் தெரிவித்துள்ளார். ஏழ்மை நிலையை பயன்படுத்திக் கொண்டு நடிகர் அஜித்தின் ரசிகர் இடமே அவரது ரசிகர் மன்றம் பெயரில் மற்றொருவர் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

Kathir

Next Post

குட் நியூஸ்...! ரூ.500-க்கு கேஸ் சிலிண்டர்...! ஏப்ரல் 1 முதல் விலை குறைக்க அரசு அதிரடி முடிவு...! முழு விவரம் இதோ...

Tue Dec 20 , 2022
ரூ.500-க்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அளித்துள்ளார் ‌. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது மாநிலத்தில் பிபிஎல் மற்றும் உஜ்வாலா பிரிவின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு தலா 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அல்வார் மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கெலாட், “விலைவாசி உயர்வு பிரச்சினை தீவிரமாக உள்ளது. […]

You May Like