fbpx

அஜித்தின் குட் பேட் அக்லி….. புதிய அப்டேட்…. ரசிகர்கள் உற்சாகம்…

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளுக்கிடையே நடந்து வருகிறது. இதுவரை விடாமுயற்சி படத்தைக் குறித்து பெரிய அளவிளான எந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் சமீபத்தில் அஜித் குமார் கமிட்டாகி இருந்தார். இது ரசிகர்களை மீண்டும் உற்சாகம் அடைய செய்தது.

விடாமுயற்சி படத்தைத் தாண்டி குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது. மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெறித்தனமான திரைப்படம் வெளியாகும் என அஜித் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. ஆனால், இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார், மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போவது யார்யார் என்பது குறித்து இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தைக் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் 6ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

shyamala

Next Post

ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அவமானம் இல்லை..... பெருமை மட்டுமே என தெரிவித்த பிரபலம்....

Thu May 16 , 2024
ஓரின சேர்க்க்கையாளராக இருப்பது அவமானம் இல்லை என பிரபல பாடகி சுதிராவின் முன்னாள் கணவர் தெரிவித்துள்ளார். பிரபல பாடகியான சுசித்ரா ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் பற்றியும் பேசியது பேசும்பொருள் ஆகி இருக்கிறது. அதில், கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் ஆரம்ப காலத்தில் ஒன்றாக பழகி வந்த சமயத்தில் ஒரே ரூமுக்குள் செல்வார்கள் என்றும் தெரிவித்தார். இந்த வீடியோ […]

You May Like