எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இவர்கள் கூட்டணியில் உருவாகி இருக்கும் 3-வது படம் இது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மையான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் கதை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த படத்தின் மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு வெளிவர இருப்பதால், படத்திற்கான ப்ரோமோஷன்கள் அதிகரித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். அந்த வகையில் துபாயில் பிரபலமான “ஸ்கை டைவ்” மூலம் வானில் துணிவு படத்தின் போஸ்டர் பறக்கவிடப்பட்டது. அந்த போஸ்டரில் டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் முக்கிய அப்டேட் வெளியிடப்படும் என்ற தகவலும் இருக்கிறது.
அந்த முக்கிய அப்டேட் துணிவு படத்தின் ட்ரைலர் ஆக இருக்கக்கூடும் என்று அஜித் ரசிகர்கள் இப்பவே கொண்டாட துவங்கியுள்ளனர். மேலும் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவரும் வாரிசு படத்தின் ட்ரைலரும் டிசம்பர் 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல் ஒன்று உள்ளது.