ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் அஜித்தின் படங்களில் இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் படு வைரலானது. இதை ரசிகர்கள் கொண்டாடினர். இந்த நிலையில் பெங்களூரு, கேரளாவில் குட் பேட் அக்லிக்கான முதல் காட்சிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு துவங்குவது வழக்கம். ஆனால், பெங்களூரு மற்றும் கேரளத்தில் காலை 6 மணிக்கே முதல் காட்சிகள் துவங்கிவிடும். பலரும் முதல் நாள் முதல் காட்சியைப் பெங்களூரு மற்றும் தமிழக – கேரள எல்லையோர திரையரங்குகளில் காண்பார்கள். ஆனால், குட் பேட் அக்லியின் முதல்காட்சி பெங்களூருவில் காலை 8.30 மணிக்கும் கேரளத்தில் காலை 9 மணிக்கும் துவங்கும் படியாக தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகிஸ்தர்கள் இணைந்து திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more: 5 ஆயிரம் சம்பளம் வாங்கும் கூலி தொழிலாளிக்கு.. ரூ.2.2 கோடி வருமான வரி நோட்டீஸ்..!! எப்புட்றா..