அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் அஜித்தின் படங்களில் இந்தப் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் போஸ்டர், டீசரை பார்க்கும்போது, சற்று வித்தியாசமான ஒரு படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டீசர் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் படு வைரலானது. இதை ரசிகர்கள் கொண்டாடினர். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.
திரைப்படத்தின் முன்பதிவு இன்று இரவு 08.02 மணிக்கு தமிழ்நாடு முழுக்க தொடங்கப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். தற்பொழுது மேலும் ஒரு சுவாரசிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். டிக்கெட் முன்பதிவுக்கு முன் டிரெய்லரை படக்குழு வெளியிடவுள்ளனர்.
இதனால் படத்தின் முன்பதிவு அதிகரிக்கும். படத்தின் கதைக்களம் இதுவரை படக்குழு வெளியிடவில்லை. டிரெய்லர் காட்சிகளில் படத்தின் கதைக்களம் ஓரளவுக்கு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று ட்ரைலர் ரீலிசைப்பற்றி பதிவிட்ட படக்குழுஅதன் நேரத்தை கூறாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.