’துணிவு’ திரைப்படம் தொடர்பாக நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையால் சமூக வலைத்தலங்களில் பரபரப்பாகி உள்ளது.
’துணிவு’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் போனிகபூர் கூட்டணியில் ’துணிவு’ திரைப்படம் வெளியாகின்றது. மஞ்சுவாரியார் 3வது முறையாக கைகோர்த்துள்ளார்.
இதில் சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. சென்னை ஐதராபாத் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்தது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் ’துணிவு’ திரைப்படம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதில் பங்கேற்க வர வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ’’ ஒரு நல்ல திரைப்படமே அந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன்’’ என்று குறிப்பிட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா. இதன் மூலம் அவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகின்றது.!!