fbpx

அஜித்தின் AK 62 படத்தின் அறிவிப்பு வெளியாவதில் தாமதம்.. என்ன காரணம் தெரியுமா..?

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் கொடுத்த கதையில் அஜீத் திருப்தி அடையவில்லை என்பதால், அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக கூறப்படுகிறது.. மறுபுறம் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கைகோர்த்துள்ள, லியோ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.. எனவே அதற்கு இணையான எதிர்பார்ப்பை உருவாக்க மிகப்பெரிய மாஸ் ஆக்‌ஷன் படத்தில் நடிக்க அஜித் முடிவு செய்துள்ளாராம்.. இதனால், அட்லீ, பிரசாந்த் நீல், விஷ்ணு வர்தன், மகிழ் திருமேனி போன்ற இயக்குனர்களிடம் அஜித் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது..

ஏகே 62 படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஓடிடி நிறுவனம்..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

அட்லீ, பிரசாந்த் நீல், விஷ்ணுவர்தன் ஆகியோர் ஏற்கனவே பிசியாக உள்ளதால், மகிழ் திருமேனி AK 62 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து லைகா நிறுவனம் எந்த அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.. இந்த படம் துணிவை விட மிகப்பெரிய ஆக்‌ஷன் படமாக இருக்க வேண்டும் என்று அஜித், மகிழ் திருமேனியிடம் கூறி உள்ளாராம்.. எனவே மகிழ் திருமேனி மீண்டும் கதையில் ஒரு சில மாற்றங்களை செய்து வருகிறாராம்..

எனவே AK 62 படத்தின் அறிவிப்புக்காக அவரின் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.. இந்நிலையில் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பு ‘AK 62’ என்ற தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்பவில்லையாம்.. எனவே படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டிலுடன் அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.. லைகா நிறுவனம் விரைவில் இந்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

நடிகர் அஜித் பிப்ரவரி 15 அன்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், மகிழ் திருமேனி அஜித்தை சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது.. இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.. ஆனால் கதையை மீண்டும் எழுதவும் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை முடிக்கவும் அவகாசம் தேவை என்பதால், படத்தின் வெளியீட்டிலும் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது…

Maha

Next Post

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..!! தமிழ்நாட்டில் வெடிக்கும் போராட்டம்..!! அரசுக்கு எச்சரிக்கை..!!

Sun Feb 19 , 2023
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தமிழக அரசின் நிதி நிலைமை சீரானதும் இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்து வந்தார். இந்நிலையில், அடுத்த மாதம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், […]

You May Like