fbpx

“என் மனைவி டெலிவரி அன்று அந்த நடிகர் செய்த செயல்.. மறக்கவே மாட்டேன்!” – அசின் கணவர்

எனக்கு குழந்தை பிறந்த போது என் குடும்பத்தார் வந்து சேரும் முன்பே அக்ஷய் குமார் வந்துவிட்டார். அதை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன் என பிரபல நடிகை அசினின் கணவர் தெரிவித்துள்ளார்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரபல நடிகை அசினுடன் அக்ஷய் குமார் நடித்த கில்லாடி 786 திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் படமாக அமைந்தது. பின் ஹவுஸ்புல் 2 படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இதற்கிடையே அசின், அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான ராகுல் சர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அரின் என்கிற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் ஷிகர் தவானின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் சர்மா, அக்ஷய் குமார் பற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ”என் மகள் பிறக்கும் நேரத்தில் அக்ஷய் குமார் அடிக்கடி எனக்கு போன் செய்து குழந்தை பிறந்ததும் சொல்லுங்கள் என தெரிவித்தார். கண்டிப்பாக சொல்கிறேன் என்றேன். குழந்தை பிறந்ததும் அவருக்கு தான் முதலில் போன் செய்தேன்.

அசினுக்கு குழந்தை பிறந்ததும் கொச்சிக்கு வர விமானத்தை தயாராக வைத்திருந்தார் அக்ஷய் குமார். என் குடும்பத்தார் வந்து சேரும் முன்பே அக்ஷய் வந்துவிட்டார். அதை என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். என் வாழ்க்கையில் ஏதாவது பெரிதாக செய்வதாக இருந்தால் நீங்கள் எனக்கு பக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்கிற தைரியத்தில் செய்வேன் என்றார்.

ராகுல் கூறியதை கேட்ட அக்ஷய் குமார் கூறியதாவது, “ராகுல் தன் மனைவி, மகளை மிகவும் நேசிக்கிறார். மனைவியை ஒரு தெய்வம் போன்று கொண்டாடுகிறார். ராகுல் என் நெருங்கிய நண்பர். சில சமயம் நாங்கள் 2, 3 வாரங்கள் பேசாமல் இருப்போம். ஆனால் மீண்டும் பேசத் துவங்கும்போது விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்போம்” என்றார்.

சென்னையை அதிரவைத்த சம்பவம்..!! பள்ளி மாணவிகளை வைத்து விபச்சாரம்..!! ஒரு நைட்டுக்கு ரூ.30,000..!!

Next Post

'அதிகார வர்க்கத்துக்கு அறைகூவல் நீயே...' அனிருத்தின் தரமான சம்பவம்.. வெளியானது இந்தியன் 2 படத்தின் பாடல்!

Wed May 22 , 2024
இந்தியன் – 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இப்படத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, […]

You May Like