மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் இன்று முதல் ஜல்லிக்கட்டு காளைகளுக்குகான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 30க்கும் மேற்றபட்ட காளைகள் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துவரப்பட்டுள்ளன. பரிசோதனையின்போது காளைகளின் உயரம் 120cm-க்கு மேல் இருக்க வேண்டும், பற்கள் நான்கு இருக்க வேண்டும், நோயுற்ற, நலிவுற்ற, காயமுற்ற காளைகளாக இருக்க வேண்டும் போன்றவை உறுதி செய்யப்படும். மேலும் இந்த பரிசோதனையில் திமில் உடன் கூடிய நாட்டு மாடுகள் மட்டுமே உட்படுத்தப்படும்.
பரிசோதனை முடிந்து முழு உடல்தகுதி பெற்ற காளைகளுக்கு இன்று தகுதிச்சான்றிதல் அதன் உரிமையாளர்களிடம் கால்நடை உதவி மருத்தவர் வழங்குவார். சான்றிதழில் சமீபத்தில் காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் உரிமையாளரின் ஆதார் நகல் முழு முகவரி முதலானவை இடம் பெற்றிருக்கும். இந்த தகுதி சான்றிதழை வைத்துதான் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெருவதற்கான டோக்கன்களை காளை உரிமையாளர்கள் பெற முடியும் என்பது குறிப்பைடத்தக்கது.