Govt Hospitals: நாட்டில் 80 சதவீதம் அரசு மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச வசதிகளை உள்ளடக்கிய, நடைமுறை விதிமுறைகளை கொண்டிருக்கவில்லை என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் பெரும்பாலான ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளைத்தான் சார்ந்து வாழ்கின்றனர். உள்கட்டமைப்பு வசதிகள், குறைந்தபட்ச ஊழியர்கள் இருப்பு (Manpower), கருவிகள் அல்லது பரிசோதனை வசதிகள் என அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச வசதிகளை உள்ளடக்கிய நடைமுறை விதிமுறைகளை இந்தியாவில் உள்ள 80 சதவீதம் அரசு மருத்துவமனைகள் கொண்டிருக்கவில்லை எனும் அதிர்ச்சித் தகவல் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் (National Health Mission), இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கை மற்றும் குறைந்தபட்ச மருத்துவக் கருவிகள் போன்றவை குறித்து எழுத்து வடிவில் சுய அளவீடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் அரசு ஈடுபட்டபோது கிடைத்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பார்த்ததில் மேற்கண்ட அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
இந்தியாவில், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், (பல்வேறு சுகாதாரப்பணிகளை மேற்கொண்டு, மக்களுக்கு பணி செய்ய அரசு முயன்று வருகிறது குறிப்பிடத்தக்கது) மாவட்ட தலைமை மருத்துவமனைகள் (767), தாலுகா மருத்துவமனைகள் (1,275), சமுதாய மருத்துவ மையங்கள் (6,064), ஆரம்ப சுகாதார நிலையங்கள் (31,053), துணை சுகாதார மையங்கள் (1,61,829) உள்ளடக்கிய 2 லட்சம் மற்றும் 988 அரசு சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
40,451 அரசு மையங்களில் டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட பல்வேறு சுகாதார புள்ளிவிவரங்களை (மத்திய சுகாதாரத் துறையால் உருவாக்கப்பட்டது) சேகரித்து ஆராய்ந்து பார்த்ததில், வெறும் 8,089 அரசு மருத்துவமனைகள் மட்டுமே, Indian Public Health Standards (IPHS) நிர்ணயித்த குறைந்தபட்ச வசதிகளை உள்ளடக்கிய சான்றாக உள்ள 80 சதவீதம் மதிப்பெண் குறியீட்டை பெற்றிருந்தன.
17,190 அரசு மருத்துவ மையங்கள் (ஆய்வில் கலந்துகொண்ட 42 சதவீத அரசு மையங்கள்) 50 சதவீத குறியீட்டு மதிப்பெண்ணுக்கு குறைவான மதிப்பை மட்டுமே பெற்றிருந்தன. (குறைந்தபட்ச அரசு வசதி என்பது (Minimum Essential Standards) 80 சதவீதம் மதிப்பெண்ணுக்கு மேல் இருக்க வேண்டும். இது அரசால் நிர்ணயிக்கப்பட்டது)
15,172 அரசு மையங்கள் 50-80 சதவீதம் இடைப்பட்ட மதிப்பெண்ணை மட்டுமே பெற்றிருந்தன. மேற்கண்ட முடிவுகள் சுகாதாரத் துறையில், அரசு தனியார்மயத்தை ஊக்குவிப்பதாக மட்டுமே உள்ளது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். நகர்புறத்தைக் காட்டிலும், கிராமப்புறங்கள் இன்னமும் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.
Readmore: ஒருநாளில் ஒரு மில்லியன் பேருக்கு பாலியல் தொற்று!. WHO எச்சரிக்கை!. பாதுகாப்பான உடலுறவுக்கு டிப்ஸ்!