fbpx

கடைசி ஜெனரேட்டரும் நின்ற அவலம்!… 36 பிஞ்சு குழந்தைகள்! 2300 பேரின் உயிருக்கு ஆபத்து!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக இதுவரை காசாவில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் உள்பட 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது. அதேநேரம் காசாவில் உள்ள இரண்டு மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மருத்துவமனைகள் மீதான தங்களது ‘போர்க் குற்றங்கள்’ அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அழுத்தங்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை அல் ஷிஃபா மருத்துவமனைக்கு 300 லிட்டர் எரிபொருளை வழங்கியதாகவும், ஆனால் அதனை ஏற்க ஹமாஸ் மறுத்ததாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், ‘எங்களது படையினர் தங்களின் உயிரைப் பணையம் வைத்து அல்-ஷிபா மருத்துவமனைக்கு 300 லிட்டர் எரிபொருளைக் கொண்டு சென்றனர். ஆனால் ஹமாஸ் முட்டுக்கட்டையால் அதனை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லை. கடந்த சில வாரங்களாகவே காசாவில் உள்ள மருத்துவமனைகளில் எரிபொருள் இல்லை. குறிப்பாக கடைசி ஜெனரேட்டரும் எரிப்பொருள் இல்லாமல் கடந்த சனிக்கிழமை நின்றுவிட்டதால் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மேலும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மருத்துவமனையில் உள்ள 36 குழந்தைகள் மற்றும் 2300 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘காசாவின் அல்-ஷிபா மருத்துவமனையில் 2,300 பேர் உள்ளனர். இவர்களின் நிலைமை குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 600 முதல் 650 உள்நோயாளிகள் உள்ளனர். அத்துடன் 200 முதல் 500 சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 1,500 இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மின்சாரம், குடிநீர், உணவு போன்ற வசதிகள் இல்லாததால், அவர்களது உயிர்கள் ஆபத்தில் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

இந்தியாவை பதற்றத்திற்குள் தள்ளுவோம்!… நியூசிலாந்து முன்னாள் வீரர் டெய்லர் பேச்சு!

Tue Nov 14 , 2023
கடந்த 2019ம் ஆண்டை போலவே நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டெய்லர் பேசியுள்ளார். கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. 2019 உலகக்கோப்பையை வெல்லும் ஒரு அணியாக இந்தியா பார்க்கப்பட்டாலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டை போன்றே […]

You May Like