Alcatraz prison: உலகின் மிக ஆபத்தான சிறையாக அமெரிக்காவின் அல்காட்ராஸ் தீவிலிருக்கும் சிறை கருதப்படுகிறது. இந்த சிறை சிறையிலிருந்து தப்பிக்கும் பல முயற்சிகளுக்குப் பெயர் போனது, இது மே 1946 இல் நடந்த “தி பேட்டில் ஆஃப் அல்காட்ராஸ்” என்று அழைக்கப்படும் முயற்சியாகும். இந்தச் சிறைச்சாலை வரலாற்றில் மிகவும் ஆபத்தான சில குற்றவாளிகளை அடைத்தது, இது கலிபோர்னியாவின் அல்காட்ராஸ் தீவில் அமைந்துள்ளது. இது 1963 முதல் மூடப்பட்டது.
இந்தநிலையில், கலிபோர்னியா தீவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும், சென்றடைய முடியாத ஒரு பிரபலமான முன்னாள் சிறைச்சாலையான அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். “நீண்ட காலமாக, அமெரிக்கா கொடூரமான, வன்முறை மற்றும் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களால் பாதிக்கப்பட்டுள்ளது, இவர்கள் சமூகத்தின் கீழ்த்தரமானவர்கள், இவர்கள் இழப்புகளை மட்டுமே உருவாக்கிவருகின்றனர்.
மேலும், “நாம் ஒரு மிகவும் கடுமையான சட்டங்களை கொண்டிருந்த காலங்களில், மிக ஆபத்தான குற்றவாளிகளைச் சிறையில் அடைக்கத் தயங்கியதே இல்லை. அவர்கள் வேறு யாரையும் பாதிக்க முடியாத வகையில் அவர்களை தொலைவிலேயே வைக்கச் செய்தோம். அதுவே எப்படி இருக்க வேண்டுமோ, அப்படித்தான் இருக்க வேண்டும்,” என டொனால்ட் ட்ரம்ப் கூறினார். அதாவது, கடுமையான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். முந்தைய காலங்களில் அமெரிக்கா எடுத்திருந்த கடுமையான சட்ட நடவடிக்கைகள் சிறந்ததாக இருந்ததாக பாராட்டுகிறார்.
“அதனால்தான், அமெரிக்காவின் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை தங்க வைப்பதற்காக, நீதித்துறை, FBI மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்குகிறேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிறைச்சாலையை மீண்டும் திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.