fbpx

இனிமேல் அலுவலகங்களிலும் மது அருந்தலாம்!… புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல்!… அரசு அதிரடி அறிவிப்பு!

புதிய கலால் கொள்கையின்படி குறைந்த ஆல்கஹால் கொண்ட மது பானங்களை அலுவலகங்களில் அருந்திக் கொள்ளலாம் என ஹரியானா அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மதுபானங்கள் மற்றும் IMFL மீதான கலால் வரி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய கலால் கொள்கையின்படி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் நலனுக்காக 400 கோடி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு மதுபான பாட்டில்கள் PETபாட்டில்களை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான கொள்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை புதிய கலால் கொள்கையின்படி ஹரியானா மாநிலத்தில் உள்ள பெரிய கார்ப்பரேட் அலுவலகங்களில் ஒரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதன்படி அங்கு பணியாற்று ஊழியர்கள் பீர் மற்றும் ஒயின் போன்ற குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை அருந்தி கொள்ளலாம். குறைந்தபட்சம் ஐந்தாயிரம் பணியாளர்களைக் கொண்ட அலுவலகங்கள் மற்றும் குறைந்தபட்சமாக ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட வளாகத்திற்கும் இந்த கொள்கை பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

உலகின் உயரமான கிரிக்கெட் மைதானம் இதுதான்!... எங்கு உள்ளது? என்னென்ன சுவாரஸியங்கள் தெரியுமா?

Tue May 16 , 2023
உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் சைல் என்ற மலைவாசஸ்தலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1893-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் கடல் மட்டத்தில் இருந்து 7,500 அடி உயரத்தில் உள்ளது. சட்லஜ் பள்ளத்தாக்கு, சிம்லா மற்றும் கசவுலி ஆகியவற்றின் அற்புதமான காட்சிகளை இரவில் பார்வையாளர்கள் இங்கிருந்து கண்டுகளிக்கலாம்.இந்த மைதானத்தை கிரிக்கெட் பிரியரான பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் உருவாக்கினார். மேலும் கூடைப்பந்து மைதானமும், கால்பந்து விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் […]

You May Like