fbpx

உஷார்!… இந்தியாவில் 22 மருந்துகள் தரமற்றவை!… மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி!

Substandard Drugs: கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடுமுழுவதும் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் 22 மருந்துகள் தரமற்றவை என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளையும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மாதந்தோறும் ஆய்வு செய்கின்றன. அதேபோன்று போலி மருந்துகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் சந்தையில் உள்ள மருந்துகளின் மாதிரிகளை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. இதில், காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, கிருமி தொற்று உள்ளிட்ட 17 மருந்துகள், தரமற்றவையாக இருந்தன.

அதேபோல், உயர் ரத்த அழுத்தம், பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ஐந்து மருந்துகள், போலியானவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன்படி தரமற்ற மற்றும் போலி மருந்துகளின் விபரங்கள், https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Readmore: கார்பனேற்றப்பட்ட செயற்கை பானங்களுக்கு மாற்று!… ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதல்கள் இதோ!

Kokila

Next Post

இன்று 5 மாவட்டங்களில் அரெஞ்சு அலெர்ட்...!

Thu May 23 , 2024
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் அரெஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, நாளை காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு, மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ம் தேதி […]

You May Like