fbpx

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைந்து வந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளை மறுதினம் வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சேலம், தருமபுரி, நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, ஆலந்தூர், மீனம்பாக்கம் , பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Chella

Next Post

தூங்க விடாமல் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்..!! தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை..!!

Mon May 1 , 2023
அமெரிக்காவில் சில ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை விடுதிகள், மக்கள் கூடும் இடங்களில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடக்கிறது. இதனால் மனிதர்களும் கொத்து கொத்தாக உயிரிழக்கின்றனர். இதேபோல் பள்ளிகளுக்குள் புகுந்தும் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். இதனால் பள்ளி குழந்தைகளும் உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. இதனால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை ஒடுக்க நடவடிக்கை தேவை என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஒருவர் கோபத்தில் […]
தூங்க விடாமல் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்..!! தட்டிக் கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை..!!

You May Like