fbpx

எச்சரிக்கை!… வாட்ஸ் ஆப்-க்கு வந்த குறுஞ்செய்தி லிங்க்!… ஒரே கிளிக்கில் ரூ.17 லட்சத்தை இழந்த நபர்!… சண்டிகரில் அதிர்ச்சி!

சண்டிகரில் நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் செயலிக்கு வந்த லிங்கை கிளிக் செய்ததால், ரூ.16.91 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரில் உள்ள பெஹ்லானா பகுதியில் வசிக்கும் அலோக் குமார் எனும் நபரின் செல்போன் எண் கொண்ட வாட்சாப் செயலிக்கு முகம் தெரியாத நபரிடமிருந்து செய்தி வந்ததுள்ளது. அவர் அதனை திறந்து பார்த்துள்ளார். ​அந்த செய்தியில் ஒரு லிங்க் இருந்துள்ளது. அந்த லிங்கை அவர் கிளிக் செய்துள்ளார்.உடனே அந்த மர்ம கும்பல் அலோக் குமார் தொலைபேசியை ஹேக் செய்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.16.91 லட்சத்தை எடுத்துவிட்டனர். சுமார் 17 லட்சம் பணத்தை இறந்தவுடன் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார் அலோக் குமார். இதன்படி, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். வாட்சப் செயலியில் தெரியாத கணக்கில் இருந்து ஏதேனும் குறுஞ்செய்தியோ, தேவையற்ற லிங்க் ஆகிய ஏதேனும் வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாம் என தொழில்நுட்ப வல்லுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Kokila

Next Post

கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கும் பச்சை மிளகாய்!... ஆச்சரியமா உள்ளதா?... டிரை பண்ணுங்க!

Sun May 21 , 2023
கோடை வெயிலில் சருமம் பாதிக்கப்பட்டால் அதனை இயற்கையான சிகிச்சைகள் மூலம், நாம் வீட்டில் சில உணவுகளை செய்து சாப்பிடுவதன் மூலம் சரிப்படுத்தி கொள்ளலாம். கோடை வெயில் காலத்தில் வெளியே பயணம் செய்வதால் சூரிய ஒளி மற்றும் வியர்வை உங்கள் சருமத்தை அதிக அளவு பாதிக்கிறது. உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வது என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று. சருமம் பாதிக்கப்பட்டால் அதனை இயற்கையான சிகிச்சைகள் மூலம், நாம் வீட்டில் சில உணவுகளை […]

You May Like