fbpx

#Alert..!! மிக கனமழை எச்சரிக்கை..!! மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு பரபரப்பு உத்தரவு..!!

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளதோடு தொடர்ந்து மழை பெய்யு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மழையும், நவ.21, 22ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், நவ.23ஆம் தேதி மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேரிடர் மேலாண்மைத்துறை, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#Alert..!! மிக கனமழை எச்சரிக்கை..!! மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு பரபரப்பு உத்தரவு..!!

இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும். பின்னர் இது அடுத்த மூன்று நாட்களுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (நவ.20) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

#Alert..!! மிக கனமழை எச்சரிக்கை..!! மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு பரபரப்பு உத்தரவு..!!

நவ.21ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Alert..!! மிக கனமழை எச்சரிக்கை..!! மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு பரபரப்பு உத்தரவு..!!

நவ.22 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நவ.23 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

#அமெரிக்கா : கிறிஸ்துமஸ் அணிவகுப்பில் கவனக்குறைவால் உயிரிழந்த சிறுமி..!

Sun Nov 20 , 2022
அமெரிக்க நாட்டில் அமைந்துள்ள வடக்கு கரோலினாவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்காக ட்ரக் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் வாகனத்தின் பின்பக்கமாக இணைக்கப்பட்ட மிதவையில் சில நடனக் குழு கலைஞர்கள் அமர்ந்திருந்ததில் ஐந்து வயதுக்குட்பட்ட சில குழந்தைகளும் அதில் அமர்ந்திருந்தனர்.கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அந்த வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து அங்குள்ள ஒரு சிறுமி மீது மோதியது. இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே […]

You May Like