இன்றைய அதிநவீன டிஜிட்டல் யுகத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அந்த வகையில் ரொக்க பரிவர்த்தனை செய்யும் போக்கு குறைந்து டிஜிட்டல் கட்டணங்கள் அதிகரித்து வருகிறது. எனவே தற்போது கோடிக்கணக்கான மக்கள் UPI கட்டண முறையை அதிகம் நம்பி உள்ளனர். சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையிலெயே பெரும்பாலான மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். ஆனால் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று UPI குறித்து முக்கிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.
கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் மூன்று மணி நேரத்திற்கு UPI ஐப் பயன்படுத்த முடியாது. அதாவது UPI மூலம் யாருக்கும் பணம் அனுப்ப முடியாது. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கணினி பராமரிப்பு காரணமாக, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) சேவை பிப்ரவரி 8, 2025 அன்று சில மணிநேரங்களுக்கு வேலை செய்யாது என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12:00 மணி முதல் 3:00 மணி வரை UPI சேவைகள் வேலை செய்யாது என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது, அதாவது, இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் UPI செயலியில் இருந்து யாருக்கும் பணம் அனுப்ப முடியாது.
இந்த செயலிழப்பு காலங்களில், HDFC வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகள் மற்றும் RuPay கிரெடிட் கார்டு மூலம் நிதி மற்றும் நிதி அல்லாத UPI பரிவர்த்தனைளையும் செய்ய முடியாது என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது.
UPI என்றால் என்ன?
UPI என்பது எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் உடனடியாகப் பணத்தை அனுப்பக்கூடிய ஒரு அமைப்பாகும். இது இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்டது. UPI உதவியுடன், மொபைல் பயன்பாடுகள் மூலம் பணத்தை மாற்றலாம். UPI கட்டண முறையில், Google Pay, PhonePe அல்லது Paytm போன்ற பயன்பாடுகளைப் பயன்படுத்தி மொபைல் சாதனம் மூலம் இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாக பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. UPI மூலம் பணம் அனுப்ப IFS குறியீடும் தேவையில்லை. இதற்கு, நீங்கள் UPI ஐடியை அறிந்திருந்தால் போதும்.
Read More : ரொக்க பரிவர்த்தனை : இந்த வரம்பை மீறினால் 100% அபராதம்.. வருமான வரித்துறை எச்சரிக்கை..