திருமணத்திற்கு 9 நாட்கள் முன்னதாக மகளின் வருங்கால கணவருடன் தாயார் வீட்டை விட்டு ஓடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ரக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு அதேமாவட்டத்தை சேர்ந்த இளைஞருடன் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமணம் 16ம் தேதி நடைபெறவிருந்தது. இதனிடையே, மணமகனுக்கும் அவரது வருங்கால மாமியாரான மணமகளின் அம்மாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குடும்பத்தினருக்கே தெரியவில்லை.
திருமணத்திற்கு இன்னும் 9 நாட்களே இருந்த நிலையில் வருங்கால மருமகனுடன் மாமியார் ஓட்டம் பிடித்துள்ளார். திருமணத்திற்கு ஷாப்பிங் செய்வதற்காக செல்வதாக கூறிவிட்டு சென்ற மணப்பெண்ணின் தாயார் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகளுடன் சேர்த்து 2.5 லட்சம் பணத்தையும் தாய் எடுத்துச்சென்றுள்ளார். திருமணத்திற்கு ஆடைகள் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிய மணமகன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.. அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
மனமகள் வீட்டில் விசாரித்த போது பெண்ணின் தாயும் நீண்ட நேரம் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இருவரும் காணாமல் போன நிலையில், மணமகளின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். இருவரின் செல்போன் லொக்கெஷன் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வருங்கால மாமியாருடன் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்து தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: 2030க்குள் இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் நடுத்தர வர்க்கத்தினராக மாற வாய்ப்பு..!! – அறிக்கை