fbpx

3 வேளையும் சாப்பாடு..!! ஒரு நாளைக்கு ரூ.5 ஆயிரம்..!! களைகட்டும் குடும்ப விபச்சாரம்..!! கல்லா கட்டும் புரோக்கர்கள்..!!

சென்னை நகரில் ”குடும்ப விபச்சாரம்” என்ற கலாசாரம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபச்சாரம்’ ஆகும். குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற தொழிலில் ஈடுபடுவது வழக்கம். இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும். இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள்.

கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள். போலீசில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள். பின்னர் நீதிமன்றம் மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள். சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களை இந்த தொழிலில் தள்ளிய ரவி (வயது 54) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர். பிரசாந்த் (30) என்ற தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து குடும்ப விபச்சாரத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். கைதான தரகர்கள் ரவி, பிரசாந்த் ஆகியோர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Chella

Next Post

டைலர் கடைக்கு வரும் பெண்களை தகாத உறவுக்கு அழைத்த கணவன்…..! மனைவி எடுத்த அதிரடி முடிவு கணவனின் பரிதாப நிலை….!

Sun Jun 25 , 2023
சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர் திருமணி இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் திருமணியின் மனைவி அருகே உள்ள ஒரு பகுதியில் துணி தைக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இத்தகைய நிலையில் தான் திருமணி ஒரு அதிர்ச்சிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அதாவது மனைவியின் துணி தைக்கும் கடைக்கு வரும் பெண்களை தன்னிடம் பாலியல் உறவில் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like