fbpx

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு..!! உடலை மீட்கும் பணி தீவிரம்..!!

தெலங்கானாவில் சுரங்க விபத்தில் சிக்கியிருந்த 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், இடதுகரை கால்வாய் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள டோமலாபெண்டா பகுதியில் குகை கால்வாயில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கால்வாய் குகையின் மேல்புறம் இடிந்து விழுந்தது.

சுரங்கத்தின் இடிபாடுகள் விழுந்ததில், 52 பேர் பாதுகாப்பாக வெளியேறினர். இதில் ஜெய் பிரகாஷ், மனோஜ் குமார், ஸ்ரீநிவாஸ், சந்தீப் சாஹு, ஜாதக்ஸ், சந்தோஷ் சாஹு, அனுஜ் சாஹு மற்றும் ராபின்ஸ் இந்தியா நிறுவனத்தின் எந்திர ஆப்ரேட்டர்களான சன்னி சிங், குர்ப்ரீத் சிங் ஆகிய 8 பேர் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சுரங்கத்தில் சிக்கியிருந்த 8 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி சுரங்கத்திற்குள் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 2 பொறியாளர்கள், 6 தொழிலாளர்கள் என மொத்தம் 8 பேர் சிக்கிக் கொண்டனர். சேறும் சகதியுமாக கிடந்த பகுதியில் கடந்த 9 நாட்களாக ராணுவ வீரர்கள், மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 120 + காலியிடங்கள்..!! மாதம் ரூ.48,000 சம்பளம்..!! டிகிரி முடித்திருந்தால் போதும்..!!

English Summary

All 8 people trapped in a mining accident in Telangana have been declared dead.

Chella

Next Post

பழம்பெரும் நடிகர் உத்தம் மொஹந்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்..!! சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி..!!

Sat Mar 1 , 2025
Actor Uttam Mohanty's body was cremated with state honors at the Sathya Nagar crematorium.

You May Like