தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் மேம்பாடு மற்றும் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் கட்டிட மேலாண்மை ஆகியவற்றிற்கு சிறப்பு குழுவை அமைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உருவாக்கப்பட்ட நிலையில், இந்த குழுவுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், TNSED Parent App உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பள்ளிகள் தங்களுடைய தேவைகளை அரசுக்கு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் போன்றவர்கள் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வித்துறையின் அனைத்து தரவுகளும் டிஜிட்டல் மையமாகும் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.