இந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த தினத்தை முன்னிட்டு ரவீந்திர நாட்டிய மந்திர் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர் நாம் ஒரு வாழ்வாதாரத்தை சம்பாதிக்கும்போது, சமூகத்தின் மீது நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. ஒவ்வொரு வேலையும் சமூகத்தின் சிறந்த நன்மைக்காக இருக்கும்போது, எந்த வேலையும் எப்படி பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது வித்தியாசமாகவோ இருக்கும் என கேள்வி எழுப்பினார்.
கடவுளுக்கு முன் அனைவரும் சமம். இந்து மதத்தில் ஜாதி ஏற்றத்தாழ்வு கிடையாது. இந்த வேறுபாடுகள் பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டன, என்று கூறுவது தவறு என்றார். நாட்டில் மனசாட்சி, உணர்வு அனைத்தும் ஒன்றே என்றும், கருத்துக்கள் மட்டுமே வேறுபடுவதாகவும் அவர் கூறினார். துளசிதாஸ், கபீர் மற்றும் சூர்தாஸ் ஆகியோரை விட புனித ரோஹிதாஸ் உயரம் கொண்டவர், அதனால்தான் அவர் புனித சிரோமணி என்று கருதப்படுகிறார் என்று கூறினார். “அவரால் சாஸ்திரத்தில் பிராமணர்களை வெல்ல முடியவில்லை என்றாலும், பல இதயங்களைத் தொட்டு, அவர்களைக் கடவுள் நம்பிக்கை கொள்ளச் செய்ததாக கூறினார்.