fbpx

”MP, MLA என மொத்த பேரும் ஸ்பாட்டுக்கு வரணும்”..!! திமுக தலைமை போட்ட ஆர்டர்..!! பரபரப்பு..!!

திமுக ஐடி விங் சார்பில் நடத்தப்படவுள்ள சோசியல் சைட்ஸ் குறித்த பயிற்சி வகுப்பில் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், ”திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வரும் 13ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று மாவட்டக் கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான “சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு” நடைபெறவுள்ளது. இதில், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள, அந்தந்த மாவட்டக் கழகத்தை அணுக வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பிக்பாஸ் டைட்டில் வின்னர்களின் தற்போதைய நிலை..!! அப்படினா சீசன் 7 வின்னருக்கும் இதே கதிதானா..?

Wed Jan 10 , 2024
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் இறுதிக் கட்டத்தை எட்டி, டைட்டில் வின்னர் யாரென தெரிந்துவிடும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் சிலர் மட்டுமே சிறந்த புகழ் நிலையை அடைகின்றனர். சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே தமது பெயரை கெடுத்துக் கொள்கின்றனர். பிக்பாஸ் டைட்டில் வென்ற போட்டியாளர்கள் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு நகர்வார்கள் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இதுவரையில் இடம்பெற்ற 6 சீசன்களிலும் […]

You May Like