கடந்த சில தினங்களாக கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அரசியல் வரவு குறைந்திருக்கிறது இதற்கு காரணம் அந்த 2️ மாநிலங்களிலுமே நெல் உற்பத்தி குறைந்து காணப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு வரும் 26 கிலோ மூட்டை அரிசி விலை 120 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது இதனை தவிர்த்து சில்லறை விற்பனையில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் முதல் வாய் வரையில் திடீரென்று அதிகரித்திருக்கிறது.
அதோடு ஒரு மூட்டைக்கு 300 முதல் 400 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோலவே அரிசி இல்லை இணையாக சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.