fbpx

தமிழ்நாடு முழுவதும்..!! பள்ளி பேருந்துகளுக்கு முக்கிய எச்சரிக்கை..!! இனி பறிமுதல், அபராதம்..!!

தமிழ்நாட்டில் பள்ளி பேருந்துகள் அரசின் போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு முறையான தகுதி சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யப்படும். அந்தவகையில், இந்தாண்டு மாவட்ட வாரியாக பள்ளி பேருந்துகளில் மூன்று கட்டங்களாக ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக விதிகளுக்கு உட்படாத பேருந்துகள் மற்றும் குறைபாடுகள் உடைய பேருந்துகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

ஜூன் 5ஆம் தேதி வரை இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. இதுவரை ஆய்வுக்கு வராத பேருந்துகளை பள்ளிகள் திறப்பின் போது கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசின் தகுதி சான்றிதழை பெறாமல் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டால் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிரடி...! 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்...! ஆதார் எண் இணைப்பது அவசியம்...!

Sun Jun 4 , 2023
100% நேரடிப்பயன் பரிமாற்றக் கணக்கை ஆதாருடன் இணைப்பதை அடைய மாநிலங்கள் முகாம்களை ஏற்பாடு செய்து பயனாளிகளோடு தொடர்பில் இருக்க வேண்டும்.பணிக்கு வரும் பயனாளியிடம் ஆதார் எண்ணை வழங்குமாறு கேட்க வேண்டும் என்றாலும் அதன் அடிப்படையில் பணி மறுக்கப்பட மாட்டாது.தொழிலாளி எபிபிஎஸ்க்கு தகுதியற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் வேலை அட்டைகளை நீக்க முடியாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் திட்டம், ஆதார் வாயிலாக இயக்கப்பட்ட கட்டணத்தை ஏற்கவில்லை – […]

You May Like