fbpx

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு…! இதை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்…

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு எழுதும் நபர்கள் காலை 09.00 மணிக்கு பின்னர் வந்தால் தேர்வு எழுத அனுமதி கிடையாது.

தமிழகம் முழுவதும் நாளை முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV-னை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, விண்ணப்பதாரர்கள் காலை 8.30 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் வருகைப்புரிய வேண்டும். காலை 09.00 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், 12.45 மணிக்கு தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதி கிடையாது.

விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் இரு இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) உடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால் அவர்கள் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம் (Electronic Watches), புளூடூத் (Bluetooth) போன்ற மின்னணு உபயோகப் பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை. 09.06.2024 முகூர்த்த தினம் என்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்க வாய்ப்புள்ளதால், தேர்வர்கள் தேர்வுக் கூடத்திற்கு 1 மணிநேரம் முன்னதாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆள்மாறாட்டம் மற்றும் தேர்வு கூடத்திற்குள் அல்லது வெளியே விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், தேர்வாணையத்தால் தக்கதென கருதப்படும் காலம் வரையில் தேர்வு எழுதுவதிலிருந்து தேர்வர்கள் விலக்கி வைக்கப்படுவர். தேர்வர்கள் தங்கள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை கொண்டு வர வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

All over Tamil Nadu, people who are going to write the Group 4 exam tomorrow will not be allowed to write the exam if they come after 09.00 am.

Vignesh

Next Post

'வெள்ளை சர்க்கரை' ஷாக் தரும் 5 விஷயங்கள்!! சாப்பிடலாமா? கூடாதா?

Sat Jun 8 , 2024
வெள்ளை சர்க்கரையினால் பலவித பாதிப்புகள் உடலுக்கு வர கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நாம் சாப்பிட கூடிய அதிகப்படியான உணவு வகைகளில் சர்க்கரை என்பது பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளை சர்க்கரை என்பது இவற்றில் பெரிதும் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். இந்த வெள்ளை சர்க்கரையினால் பலவித பாதிப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம். வெள்ளை சர்க்கரை முதன்முதலில் 12 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் இது ஒரு ஆடம்பரமான […]

You May Like