fbpx

தமிழ்நாடு முழுவதும்..!! பள்ளிகள் திறக்கும் முன் இதை செய்திருக்க வேண்டும்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வரும் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தகுந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், 10, 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தேவையான உதவிகளையும் சிறப்புப் பயிற்சிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

குட் நியூஸ்..!! தமிழ்நாட்டில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!

Fri Jun 2 , 2023
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால், இந்தாண்டு வைகாசி விசாகம் ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி காலை வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து […]

You May Like