தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக் காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. மேலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தேர்வுக்கான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டது. மாநில அளவில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் பல இடங்களில் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதலங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.. இம்முறை வினாத்தாள் கசியாத வகையில் இருக்க புதிய நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது..
அந்த வகையில் தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக் காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடத்த நடவடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.. இம்மாதம் 30-ம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..