fbpx

”பொறுமையா இருந்ததெல்லாம் போதும்”..!! ”அனைத்து அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும்”..!! ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!!

வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து அதிகாரமும் கைகூடும் என விசிக துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

மதுரையில் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “நாங்க பிரச்சனைக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். பிரச்சனை வந்தால் தான் அதுக்கு Solution கிடைக்கும். அமைதியா பொறுமையா இருந்ததெல்லாம் போதும். நாங்க அமைதியா ரொம்ப வருஷம் இருந்துட்டும். இது கொள்கை கூட்டணி, அதிகாரத்துக்கான கூட்டணி அப்படின்னு சொல்லுவாங்க.

அப்படினா அதிகாரத்தை எங்ககிட்ட குடுத்துருங்க. அதிகாரத்தை தலித் மக்களுக்கு கொடுக்கணும். இங்கு ஒருவர் மட்டும் ஆளுவதற்கு பிறக்கல. எங்களுக்கான அரசியலையும், எங்களுக்கான பிரச்சாரத்தையும் எங்களுக்கு உருவாக்கத் தெரியும். தேர்தல் அரசியல் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார்கள். ஆனால், இப்போது தேர்தல் அரசியலை நாங்கள் எப்படி உருவாக்குவோம் என்பது கடந்த 6 மாதங்களாக எல்லா தொலைக்காட்சியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நம்பர் 1 ஆக இருக்கிறது.

திருமாவளவனின் கனவுகள் கூடிய விரைவில் நிறைவேறும். எல்லா விதமான அதிகாரமும் சட்டமன்றத் தேர்தலில் நிறைவேற்றப்படும். உணர்வுகளை சொல்வதற்கு அனுபவம் தேவையில்லை. உண்மையை சொல்வதற்கு அனுபவம் தேவையில்லை. குறிக்கோளை அடைவதற்கு தோழர்கள் என்னுடன் இருக்கிறார்கள்” என்று பேசினார்.

Read More : மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்..!! உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்..!! அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்..!!

English Summary

VKC Deputy General Secretary Adhav Arjuna has stated that all power will be in his hands in the upcoming assembly elections.

Chella

Next Post

அன்று கல்லூரிக்கு ஃபீஸ் கட்ட கூட காசு இல்ல.. ஆனா இன்று இந்தியாவின் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை..! யாருன்னு தெரியுதா..!

Wed Nov 20 , 2024
She didn't even have money to pay college fees that day.. But today she is India's highest paid actress!

You May Like