அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீபுரம்தான் குமிளந்துறையை சேர்ந்தவர் 22 வயது இளைஞர் அஜித். இவர் கூலித் தொழில் செய்து வரும் நிலையில், பக்கத்து ஊரில் 12ஆம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் அஜித் அந்த சிறுமியை காதலித்து வந்திருக்கிறார். சிறுமியும் அவரை காதலித்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆசைவார்த்தை கூறி சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சிறுமியின் தாய், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அஜித்தை தேடி வந்தனர். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் நேற்று இரவில் அஜித்தை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.