fbpx

பெட்ரோல் பங்குகளில் இந்த வசதிகள் எல்லாம் இலவசமாகவே கிடைக்கும்..!! வாகன ஓட்டிகளே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

அரசு விதிப்படி சில வசதிகளை இலவசமாக கொடுத்தால் மட்டுமே பெட்ரோல் பங்க் உரிமம் வழங்கப்படும். இந்த வசதிகள் எதுவும் கிடைக்காத பட்சத்தில் அங்குள்ள புகார் புத்தகத்தில் உங்கள் கருத்தையும் எழுதலாம். பிறகு பெட்ரோல் பங்க் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பெட்ரோல் பம்பில் நீங்கள் பெறக்கூடிய இலவச வசதிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கழிப்பறை வசதி: பெட்ரோல் பங்கில் கழிப்பறை வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இதில் பெண்கள், ஆண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் இருக்க வேண்டும். பெட்ரோல் பங்கில் உள்ள கழிப்பறை வசதியை எரிபொருள் வாங்காமல் கூட பயன்படுத்தலாம். இந்த கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பது பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் பொறுப்பு.

இலவச காற்று: எந்த பெட்ரோல் பம்பிலும் எரிபொருளை நிரப்பினால், கட்டணம் ஏதுமின்றி உங்கள் காரின் டயர்களில் காற்றை நிரப்பும் வசதி இருக்க வேண்டும். பம்ப் சார்பில் இந்த வசதி செய்து தருவதும், அதற்கான பணியாளரை நியமிக்க வேண்டியதும் கட்டாயம்.

குடிநீர்: பெட்ரோல் பம்பில் சுத்தமான குடிநீர் இருக்க வேண்டும். பங்கிற்கு வரும் ஒவ்வொருவருக்கும் சுத்தமான தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்பது கட்டாயம்.

தீ அணைக்கும் கருவி: பெட்ரோல் பம்புகளில் நீங்கள் எப்போதும் தீயை அணைக்கும் கருவிகளைக் காணலாம். இவை பம்ப் தேவைக்கானது மட்டுமல்ல. பங்க் அருகில் அல்லது சாலையில் ஏதேனும் தீ விபத்து என்றாலும், தீயை அணைக்க வேண்டி பெட்ரோல் பங்கில் இருந்து தீயணைப்பு கருவியை எடுக்கலாம். இதற்கு பெட்ரோல் பங்கில் யாரும் மறுக்க முடியாது.

முதலுதவி பெட்டி: சாலை விபத்துகளின் போது ஏற்படும் காயங்களுக்கு பெட்ரோல் பங்க் ஊழியர்களின் உதவியுடன், முதலுதவி பெட்டியில் உள்ள மாத்திரை மற்றும் மருந்துகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான மாத்திரை, மருந்துகளை பெட்ரோல் நிலையம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

அதேபோல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தரத்தை பரிசோதிக்க விரும்பினால் பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் ‘பில்டர்’ பேப்பர் சோதனை செய்து காட்ட சொல்லி எரிபொருளின் தரத்தை உறுதி செய்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் நிலையங்களிலும் இந்த வசதிகள் அனைத்தையும் இலவசமாக பெறலாம். இதற்கு அந்த நிலையங்களில் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும் என்பது கட்டாயமில்லை.

Read More : வானில் நிகழும் அதிசயம்..!! ஒரே நேர்க்கோட்டில் 6 கோள்கள்..!! எப்போது பார்க்க முடியும்..? விஞ்ஞானிகள் தகவல்..!!

Chella

Next Post

பிறந்த நாளுக்கு நன்கொடை வழங்கிய பிரபலம்.... கோயிலுக்கு வாரி வழங்கிய என்.டி.ஆர்.

Fri May 17 , 2024
தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். கோயிலுக்கு நன்கொடை அளித்துள்ளார். ஆர்.ஆர்.ஆர்’ பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30ஆவது படமான தேவாரா படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தியில் ஹ்ரித்திக் ரோஷனுடன்  ‘வார் 2’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை அடுத்து கே.ஜி.எஃப் பட […]

You May Like