2016க்கு பின், M.phil, PhD பட்டம் பெற்றால், அதற்கு ஊக்க ஊதியம் பெற முடியாது.
அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், M.phil, PhD முடித்தவர்களுக்கு, ஊக்க ஊதியம் கேட்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடைமுறையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் , பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், 2016ம் ஆண்டு அல்லது அதற்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், 2016க்கு பின், M.phil, PhD பட்டம் பெற்றால், அதற்கு ஊக்க ஊதியம் பெற முடியாது.
எனவே, கல்வியியல் கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், இந்த விதிகள் பொருந்தும். அதன்படி, 2016க்கு பின் நியமிக்கப்பட்டு, M.phil, PhD முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் கிடையாது என உயர் கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.